Wednesday, November 7, 2018

GIVE THEM D.A.T.E.S

Khathija khan, Uswatun Hasanah for Pooma Educational Trust - The National UN Volunteers.
GIVE THEM D.A.T.E.S.
Mubaarak was a very naughty and troublesome child. His mother was at her wit's end.
Sometimes in frustration she would say, "I wish you were a blessing as your name says. Instead you are more of an 'Aafat and a curse!"
One day her friend who was an 'Aalimah came to visit and she immediately sensed the tension in the air.
"Saadiah, I don't know what to do with this child. He just does not listen. I get complaints about his behaviour from school, madrasah and parents evey week. He is making me miserable. He just doesn't listen!"
"Give him D.A.T.E.S daily. ", replied Apa Saadiah calmly. "It does miracles."
"Saadiah this is serious. I know dates are sunnah and a blessed food but how is it going to help him."
Apa Saadiah replied, "What I mean is that we should give our children quality parent and child time. Show them love and be their friend.
Then give them D.A.T.ES:
*D*-Make *dua* for them daily. Never underestimate the power of a mothers dua. Cry to Allaah at tahajjud time. Ask Allah to make him the coolness of your eyes. You will see the difference soon.
*A*-Give him *advice* daily. Advice will surely benefit any believer even if it is after some time. Do not think he is not listening. It will go in one day. But do not shout him. Advise him with love and care.
*T*-Start *ta'leem* in your home. Many senior Ulama have recommended this practise and the results are amazing. Read from the Virtues of Good deeds of Hazrath Shaykh Zakariyya Rahimahullaah even if it is for a few minutes. Its a start. If our words have no effect on him, the words of Allaah and His Rasool sallallaahualyhi wa sallam can soften the hardest of hearts and change the greatest of evil people. The nur of Hadith will permeate our hearts through ta'leem.
*E*- Let us be an *example* to our children. If we want them to read salaah, we should be punctual on salaah. If we want them to stay away from evil, we should not be the means nor indulge in the same evil.
*S*-Give sadaqah daily on their behalf. Sadaqah is a multi tool for a believer. Its a cure for illnesses too."
"Jazakallaah Apa. I will do this. Make dua."
Respected brothers and sisters. Many people experience the same problem as the mother above.
The solution: GIVE THEM D.A.T.E.S

அற்புதம் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை அல்லாஹ்வைத் தவிர...

எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களைப் படைத்து, மற்ற உயிரினங்களுக்கு வழங்காத பல சிறப்புக்களையும், ஆற்றல்களையும் மனிதர்களுக்கு வழங்கியுள்ளான்.
ஆனால் எல்லையற்ற ஆற்றலை மனிதன் உள்ளிட்ட எந்தப் படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவில்லை.
ஒவ்வொரு படைப்புக்கும் வழங்கப்பட்ட ஆற்றலின் எல்லையை ஆய்வு செய்தும், அனுபவ அறிவு மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம்.
வேகமாக ஓடும் ஆற்றலை எடுத்துக் கொண்டால் மணிக்கு ஐந்தாறு கிலோ மீட்டர் வேகத்தில் மனிதன் ஓட முடியும். உலக ஓட்டப் பந்தயச் சாம்பியன் ஹுஸைன் போல்டின் ஓட்ட வேகம் மணிக்கு 27 மைல் ஆகும். கடும் முயற்சிகளும், பயிற்சிகளும் செய்தால் சிலர் இந்தச் சாதனையைச் செய்ய முடியும். இது தான் மனிதனின் ஓடும் திறனுக்கு எல்லை.
ஒரு மனிதன் சாதாரணமாக பத்து கிலோ எடையைத் தலைக்கு மேல் தூக்க முடியும். கடுமையான பயிற்சி எடுத்தால் பெண்கள் 120 கிலோவும், ஆண்கள் 170 கிலோவும் தூக்க முடியும். இதுதான் சாதனை அளவாக உள்ளது. இன்னும் பயிற்சி எடுத்தால் ஓரிரு கிலோ அதிகமாகத் தூக்கும் சாதனையாளர்கள் உருவாகலாம். இது தான் மனிதனின் தூக்கும் ஆற்றலின் எல்லை.
அது போல் மனிதனுக்கு ஐந்து புலன்களும் ஆறாவதாக பகுத்தறிவும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரு எல்லைக்கு உட்பட்டவை தான்.
எந்த மனிதனாக இருந்தாலும் அவர் மனிதனுக்கு இயல்பாக வழங்கப்பட்டுள்ள ஆற்றலுக்குட்பட்டு மனிதனைப் போல் தான் செயல்பட முடியும். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தச் செயலையும் எந்த மனிதனும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
உதாரணமாக அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 42:11
அவனுக்கு நிகராக யாருமில்லை.
திருக்குர்ஆன் 112:4
அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இவ்வசனங்களின் கருத்தாகும்.
உதாரணமாக நமக்குக் கேட்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் கேட்கும் திறன் உள்ளது. ஆனால் நமக்கு உள்ள கேட்கும் திறன் அல்லாஹ்வுக்கு உரிய கேட்கும் திறன் போல் உள்ளது என்று நம்பலாமா? அப்படி நம்பினால் அது அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனைக் கருதியதாக ஆகும்.
அல்லாஹ்வின் கேட்கும் திறன் எல்லையில்லாதது. நமது கேட்கும் திறன் எல்லைக்கு உட்பட்டதாகும்.
காற்றின் மூலம் அல்லது மின்காந்த அலைகள் மூலம் கடத்தப்படும் ஒலிகளைத் தான் கேட்க முடியும்.
குறிப்பிட்ட தொலைவு வரை தான் கேட்க முடியும். குறிப்பிட்ட டெசிபல் எனும் அளவில் இருக்கும் ஒலிகளைத் தான் கேட்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றைத் தான் கேட்க முடியும். சில பயிற்சிகள் மூலம் மேலும் ஒன்றிரண்டு செய்திகளைக் கூடுதலாகக் கேட்க முடியும். கேட்கும் திறனுக்கும் இப்படி எல்லை இருக்கிறது.
பார்த்தல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். மனிதர்களாகிய நமக்கும் பார்க்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் பார்க்கும் திறன் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறன் போல் ஒரு மனிதனுடைய பார்க்கும் திறன் உண்டு என்று நம்பினால் அது இணைகற்பித்தலாகும்.
குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால் தான் பார்க்க முடியும். எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறனுக்கு எந்த எல்லையும் இல்லை.
இந்த மனிதர் எவ்வளவு தொலைவில் உள்ளதையும் பார்ப்பார் என்றும், எத்தனை தடுப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து இவர் பார்ப்பார் என்றும் நம்பினால் அந்த மனிதரை அல்லாஹ்வைப் போன்றவராக நாம் கருதியவர்களாக ஆவோம்.
அது போல் மனிதர்கள் செய்யும் காரியங்களும் எல்லைக்கு உட்பட்டவையாகும். அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த – எந்த மனிதருக்கும் செய்ய முடியத காரியங்களை ஒருவர் செய்வார் என்று நம்புதல் இணை கற்பித்தலில் சேரும்.
ஒருவர் அற்புதம் செய்கிறார் என்று நாம் நம்பினால் அந்த மனிதர் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த காரியங்களைச் செய்கிறார் என்பது அதன் உட்பொருளாகும். இது அப்பட்டமான இணை வைத்தலாகும்.
மகான்கள் அற்புதங்கள் செய்ய வல்லவர்கள் என்ற கொள்கை உள்ளவர் இதற்கு ஒரு பதிலை வைத்துள்ளார்கள். இந்த அற்புதங்களை மகான்கள் சுயமாகச் செய்வதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றலின் அடிப்படையில் தான் செய்கிறார்கள். எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று நியாயம் கற்பிக்கின்றனர்.
இது முற்றிலும் தவறாகும். ஒரு மனிதன் தனக்குரிய அதிகாரத்தைத் கீழே உள்ளவனுக்குக் கொடுக்க மாட்டான். அவ்வாறிருக்க சர்வ வல்லமைபடைத்த அல்லாஹ் தனக்கிருப்பது போன்ற ஆற்றலை மற்றவருக்கு எப்படிக் கொடுப்பான்? இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ்வே தெளிவுபடுத்துகிறான்.
உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?
திருக்குர்ஆன் 16:71
தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவர்களின் மேற்கண்ட வாதம் தவறானது என்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமானதாகும். மேலும் நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் அற்புதம் செய்யும் ஆற்றல் அளிக்கப்படவில்லை என்பது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்குச் சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதையும் இவர்கள் சிந்திக்க வேண்டும்.
இறைத்தூதர்களானாலும், இறைநேசர்களானாலும் அவர்களால் குழந்தை வரம் தர முடியாது. ஏனெனில் இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
திருக்குர்ஆன் 22:5
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.  அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
திருக்குர்ஆன் 42:49,50
மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.  அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.
திருக்குர்ஆன் 82:6,7,8
குழந்தையைக் கொடுத்தல் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 3:6, 3:38-40, 3:47, 11:71,72, 13:8, 14:39, 16:72, 16:78, 19:5, 21:90, 40:64, 64:3, ஆகிய வசனங்களும் இதைக் கூறுகின்றன.
ஆட்சியையும், அதிகாரத்தையும் எந்த இறைநேசரும் எவருக்கும் வழங்க முடியாது. இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.
"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:26
இவ்வசனமும் 2:247, 3:26, 12:101, 38:35 ஆகிய வசனங்களும் ஆட்சியை வழங்குவது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரம் என்று கூறுகின்றன.
ஒரு மனிதனைச் செல்வந்தனாக்குவதும், ஏழையாக ஆக்குவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். எந்த மகானும் யாருக்கும் இதை வழங்கிட முடியாது என்றும், இதில் யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா'' என்று நீர் கேட்பீராக!
திருக்குர்ஆன் 10:31
பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில்157 உள்ளது.
திருக்குர்ஆன் 11:6
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை.
திருக்குர்ஆன் 13:26
எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்.
திருக்குர்ஆன் 15:21
அல்லாஹ்வை விட்டு விட்டு வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் இவர்கள் வணங்குகின்றனர்.
திருக்குர்ஆன் 16:73
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 17:30
(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
திருக்குர்ஆன் 20:132
வறுமையை நீக்குவதும், செல்வத்தை அளிப்பதும், உணவு வழங்குவதும் அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று இவ்வசனங்களும் 2:155, 2:212, 2:245, 3:27, 3:37, 4:130, 5:64, 6:151, 9:28, 10:107, 16:71, 24:32, 24:38, 24:43, 25:10, 28:82, 29:17, 29:60, 29:62, 30:37, 30:48, 34:24, 34:36, 34:39, 35:3, 35:15, 39:52, 41:10, 42:12, 42:19, 42:27, 47:38, 51:58, 65:3, 67:21, 89:16, 93:8 ஆகிய வசனங்களும் தெளிவாகக் கூறுகின்றன.
வானிலிருந்து மழையை இறக்கி அருள் புரிவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!
திருக்குர்ஆன் 2:22
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 2:164
"வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா'' என்று நீர் கேட்பீராக!
திருக்குர்ஆன் 10:31
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
திருக்குர்ஆன் 15:22
அல்லாஹ்வே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் (தண்ணீர்) மூலம் இதற்கு உயிரூட்டினான். செவியுறும் சமுதாயத்துக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.
திருக்குர்ஆன் 16:65
வானிலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையடைவதையும் நீர் அறியவில்லையா? அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 22:63
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.
திருக்குர்ஆன் 23:18
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.
திருக்குர்ஆன் 24:43
(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.
திருக்குர்ஆன் 27:60
"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.
திருக்குர்ஆன் 29:63
எந்த நல்லடியாரும் மழையை இறக்கி அருள் புரிய முடியாது. மழையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் என்று இவ்வசனங்களும், 6:6, 6:99, 7:57, 11:52, 13:12, 13:17, 14:32, 16:10, 20:53, 22:5, 25:48, 27:64, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 67:30, 71:11, 78:14, 80:25 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.
நோய்களைக் கொடுப்பதும், அதிலிருந்து நிவாரணம் அளிப்பதும் அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளவையாகும்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

Monday, November 5, 2018

புனித மதீனாவின் மகிமைகள்

Contribution by Yaseeniath Moulavis Association for Pooma Educational Trust
புனித மதீனாவின் மகிமைகள்
*قال النبي صلى الله عليه وسلم*
*انا سيد العالمين*
நானே உலகத்தவர் அனைவருக்கும் தலைவராக இருக்கின்றேன்.
*انا سيد الناس يوم القيامة*
கியாமத் நாளில் நானே அனைத்து மக்களுக்கும் தலைவராக இருப்பேன்.
(புகாரி கிதாபுல் அன்பியாஇ)
*انا سيد ولد آدم ولافخر*
பெருமைக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே ஆதமின் பிள்ளைகள் அனைவருக்கும் நானே தலைவராக இருக்கிறேன்.
(ஜாமிஉஸ்ஸகீர் ஹ.எ.2693, இப்னு மாஜா ஹ.எ.4308).
*المدينة تنفي الناس كما تنفي الكير خبث الحديد*
கொல்லனின் துருத்தியாகிறது இரும்பின் துருவைநீக்கி சுத்தம் செய்வது போல மதீனாவாகிறது மனிதர்களை (அகத்துருவை நீக்கி) பரிசுத்தப்படுத்தி விடும்.
(புகாரி ஷரீப், மிஷ்காத் 240)
*على انقاب المدينة ملائكة لايدخلها الدجال ولاالطاعون*
புனித மதீனாவின் கனவாய்கள் (மலைப் பாதைகள்) மீது மலக்குகள் இருக்கிறார்கள். எனவே தஜ்ஜாலைப் போன்ற துஷ்டர்களும் பேதியைப் போன்ற பீதி தரும் காலரா நோய்களும் மதீனாவில் நுழைய முடியாது.
(புகாரி, முஸ்லிம், மிஷ்காத் 240)
*إن إبراهيم حرم مكة فجعلها حراما وإني حرمت المدينة حراما*
நிச்சயமாக இப்றாஹீம் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மக்கா நகரத்தை சங்கைப்படுத்தி புனிதம் மிகுந்ததாக ஆக்கினார்கள். நான் மதீனமா நகரத்தை சங்கைப்படுத்தி புனிதமாக்கியிருக்கிறேன்.
(முஸ்லிம், இப்னு மாஜா ஹ.எ.3113)
*لا يكيد أهل المدينة أحد إلا إنماع كما ينماع الملح في الماء*
எவன் புனித மதீனா வாசிகளுக்கு (பாதகமாக) சூழ்ச்சி செய்வானோ அவன் தண்ணீரில் உப்பு கரைந்து (அழிந்து) விடுவது போல கரைந்து விடுவான்.
(புகாரீ, முஸ்லிம், இப்னு மாஜா 3113).
*من سكن المدينة وصبر على بلائها كنت له شهيدا يوم القيامة*
எவர் புனித மதீனாவில் குடியேறி அதனுடைய சோதனைகளைப் பொறுத்துக் கொள்வாரோ அவருக்கு நானே கியாமத் நாளில் சாட்சியாளராக இருப்பேன்.
(பைஹகீ, மிஷ்காத் 240)
*اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة*
இறைவா! புனித மக்காவில் நீ அருளியிருந்த பாக்கியங்களிலிருந்து இருமடங்கு (பாக்கியங்களை) புனித மதீனாவில் ஆக்குவாயாக.
(புகாரீ, முஸ்லிம், மிஷ்காத் 240)
*من استطاع أن يموت بالمدينة فليمت بها فاني أشفع لمن يموت فيها*
எவராவது புனித மதீனாவில் மரணிப்பதற்கான பாக்கியத்தைப் பெற்றிருப்பாராகில் அவர் அங்கேயே மரணிக்கட்டும். ஏனென்றால் அங்கு மரணிப்பவர்களுக்கு நிச்சயமாக நான் பரிந்துரைப்பேன்.
(திர்மிதி, அஹ்மத், மிஷ்காத் 240, இப்னு மாஜா - 3112)
மேற்படி ஹதீஸ்களும் இன்னும் அனேக ஹதீஸ்களும் மாமதீனாவின் புன்னியங்கள் குறித்தும் புனிதங்கள் குறித்தும் வந்துள்ளது.

Monday, October 29, 2018

Uswatun Hasanah – The Most Beautiful Model

An Al-educator for Pooma Educational Trust
Uswatun Hasanah – The Most Beautiful Model
It says in Surah Al-Ahzaab, verse no. 21 “Indeed you have in the messenger of Allah, an excellent example to follow.” Therefore to follow his example, must we look into the books of’ traditions’ that are attributed to him?
The verse in Surah Al Ahzaab read as follows in the Arabic:
Certainly you have in the messenger of Allah an excellent example (to follow)  for him who hopes in Allah and the latter day and remembers Allah much. (33:21)
The personal example of the messenger is reflected in the Qur’an and believers are expected to emulate it. Only those who are thoroughly conversant with Qur’anic principles qualify as ‘witnesses’
And those who disbelieve say: You are not a messenger. Say: Allah is sufficient as a witness between me and you and whoever has knowledge of the Book. (13:43)
 Knowledge of the Qur’an is a prerequisite of an understanding of the messenger’s example. Those mentioned in the ayat (as above) are classed in a privileged category. This suggests that there are those who believe ‘knowingly’ and those who have blind faith.
Uswatun Hasana is an excellent example to follow means that we know how the messenger behaved in life and understand his motivation on different occasions and the principles he acted upon.
It would be useful to consider a verse in Surah Yunus:
I follow naught but what is revealed to me; surely I fear, if I disobey my Sustainer, the punishment of a mighty day. (10:15)
 If we are to follow the example of the messenger we must bear in mind what moved him, his hopes and fears and his constant concern with rectitude in the Qur’anic sense.
On the other hand, in Surah Al Mumtahina it says that in Ibraheem and his companions we have excellent examples (of behavior).
Indeed, there is for you an excellent example in Ibrahim and those with him (60:4)
This does not refer to the ‘tradition’s and/or heresies attributed to him. It simply means what is said: the conduct of Ibrahim, as described in the Qur’an, is exemplary. He should consequently be thought of as an example to believers who should accordingly try to emulate him.
What does "You have a good example in the Prophet" mean?

Where is the example of the Prophet? Over the centuries, every aspect of Prophet Muhammad has been turned into an ideal model for every person to follow. But are these aspects, taught as perfect model, really meant to be followed?
Prophet Muhammad was a man as well as a prophet. As a human being he has personal preferences in style, food or leisure activities. He may like to eat fish, his favourite colour may be green, or blue, or red. All these elements are his humanly choices and personal preferences. But what has been done after his dismissal is encapsulation of every element of the human personality of the prophet into a divine model recommended for all human beings to follow.
For example, they teach that when eating food, you should sit on your knees, or with one knee up, because the prophet had sat in that manner. Or when eating you must eat with your right hand because the prophet used his right hand. Even left-handed Muslim children who struggle to eat or perform tasks with right hand are discouraged from accepting how Allah created them (using left hand). There is no understanding in such people that the prophet did so because he simply felt comfortable to eat in that position or may be because he was right-handed and he would use his left hand if he was left-handed.
Just because the prophet's favourite colour was green, does not mean we must all have our favourite colour green. Just because the prophet liked to eat dates, does not mean anyone who does not like eating dates is less of a Muslim - merely because of his personal food preferences. Just because the prophet wore an Arab dress (as he was born into an Arab family) does not make the Arab dress recommended for all people. Rather Allah celebrates our variations in culture and tradition:
"Among His signs are the creations of the heavens and the Earth, and the differences in your languages and colours. In that are signs for all people". (Qur'an 30:22)
It is a form of idolising an individual and this happens when love for that being exceeds the love of Allah. In some books, Muslims are even taught to take the prophet's posture while walking - said to be slightly leant forward manner, and even an order in which to clip finger-nails and toe nails! Did the prophet ever intend on him being followed in this manner?
If circumstantial and personal attributes of the prophet becomes virtuous to be followed, then it would mean all people should stop driving cars, and replace them with camels!
Now, is the message of the prophet in these personal habits and preferences of his, or something greater?
"It is not fitting for any person to whom Allah gives the Book, the wisdom and prophethood, that he should say to people: 'Be servants to me rather than Allah!', rather he would say: 'Be devotees (of Allah) for what you have taught from the Book'." (Qur'an 3:79)
Notice how in the verse, the understanding of true faith is shown to come from the Book of Allah, and the prophet would say, 'Be devotees (of Allah) for what you have taught from the Book'.". So, we must comprehend what faith really means from the Qur'an.
The following verse is used by traditional followers who commit such idolising of the prophet, in justifying what they do:
"Indeed, in the messenger of Allah a 'good example (uswatun hasana / أُسْوَةٌ حَسَنَة)' has been set for the one who seeks Allah and the Last Day and thinks constantly about Allah." (Qur'an 33:21)
The Arabic (uswatun hasana / أُسْوَةٌ حَسَنَة) is important to bear in mind. Instead of his 'good example' being in his choice of favourite colour, favourite food, the way he felt like sitting - the prophetic 'good example' was in his faith. Prophet Muhammad relied on Allah at all times, and passed all the trials and tribulations he faced without ever loosing faith in Allah. His patience in overcoming difficult times and encouraging others to do the same, fearing Allah as well as upholding the Qur'an at all times. Basically, everything which makes a great believer to Allah is what made the prophet a 'good example', (uswatun hasana / أُسْوَةٌ حَسَنَة). Personal traits are what everyone will have and they vary with worldly variables - everyone is entitled to have their own likes and habits, and they should be appreciated as what makes each of us unique.
The above mentioned qualities are what we 'strive' to earn and which makes us special to Allah - and which are what made the prophet special.
Now we refer the Arabic phrase (uswatun hasana / أُسْوَةٌ حَسَنَة), meaning 'good example' to another place in the Qur'an. We discover that the understanding we stated above is the correct one. The identical phrase has been used in the following verse to describe Prophet Ibrahim:
"There has been a good example (uswatun hasana / أُسْوَةٌ حَسَنَة)  set for you by Ibrahim and those with him..." (Qur'an 60:4)
Since Prophet Ibrahim was the same "uswatun hasana / أُسْوَةٌ حَسَنَة", and it does not mean his habits and personal attributes - rather his faith, wethus see that indeed we have the correct understanding of "uswatun hasana / أُسْوَةٌ حَسَنَة" as applicable to Prophet Muhammad, since the same words are used to describe both of them.
The common definitions and ideas of how to be a good Muslim really trivialises the true religion. It drifts people away from the the real prophetic and Quranic message of what it means to be a true believer - that is to submit to Allah and understand His true greatness while comprehending the Qur'an. Engrossed in worrying about changing personal habits and lifestyles, individuals lose the vision and wisdom needed to read and understand the Qur'an and becoming submitted servants to Allah. Religion becomes a way of nostalgic living rather than being based on awe of Allah and the Qur'an.  
To conclude, the prophet's good example was in his unwavering faith in Allah, his adherence to the righteous path shown by the Qur'an - "I only follow what is revealed to me" (6:50), his wisdom in preaching the message of Allah, forgiveness, mercy and all attributes of a true believer as taught by the Qur'an - it is not in his humanly preferences and habits, rather in his believer attributes.

https://pooma-trust.blogspot.com/2018/10/pooma-educational-trust-international.html?m=1

Sunday, October 28, 2018

Seven SINS


Hazrat for Pooma Educational Trust
2766 – حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ قَالَ
حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الْمَدَنِ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்” என்று கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 2766

மய்யித்தை அடக்கம் செய்த உடன்


Haji for Pooma Educational Trust
https://iuef12.blogspot.com/2018/10/iuef-pooma-educational-trust-member-of.html?m=1
மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்!

உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள்,

*''உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.''*

(ஆதாரம்: அபூதாவூத்)

நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன் , உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஜ்ரத் து'ஆச் செய்வார் . எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்துக்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா ... ?

எப்பொழுதும் சடங்கும், சம்பிரதாயமும் தான் !

ஒரு ஹதீஸ்,

அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்;

*''நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.*

ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்: ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்; அடக்கம் செய்தபின் முஅத்தின் வழக்கமாக ஓதும் 'துஆ'வுடன் திரும்பி, மறுபடியும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து மறுபடியும் இமாம் சாகிப் இன்னொறு முறை து'ஆ செய்து வந்தவர்களுக்கு எல்லாம் முஸாபஹா செய்வதில் நேரத்தை செலவிடுகிறோம். இது மார்க்கத்தில் சொல்லப்படாத வழக்கமாகும்.

மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு து'ஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம்.

மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள்.

"உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்."

ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் து'ஆ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

*மய்யித்தை விசாரணை செய்யப்படும் அந்த நேரத்தில் து'ஆ செய்யும் மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!*

எனவே அந்த து'ஆ எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நமக்கு இப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும்.

*அல்லாஹ் மிக்க அறிந்தவன்.*

பூமான் நபி பெருமானாரின் சிறப்புகள்

#பூமான்_நபியின்_ﷺ_தனிச்_சிறப்புகள்​​​ 
Hazrat for Pooma Educational Trust
உயிருக்கு உயிரான உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தனிச் சிறப்புகள்
♣ 'அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21)
♣ 'மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'
(அல்குர்ஆன் : 68:4)
♣ நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்குர்ஆன் : 94:4)
♣ மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.(அல்குர்ஆன் : 93:11)
♣ (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(அல்குர்ஆன் :21:107)
♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:"நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்."
(ஆதாரம் மிஷ்காத் - 513)
♣ நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:"ஆதமுடைய பிள்ளைகளில் தலை முறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்."
(ஸஹிஹுல் புகாரி - 3293)
♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:"ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரசூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்"
(ஸஹிஹுல் புகாரி 335 , ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் 5747)
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்: "நானே முன்னோர் பின்னோர் யாவரிலும் மிக சங்கைகுரியவனாக இருக்கின்றேன்
(திர்மிதி 3131, தாரமி 47, முஸ்னத் அஹமத் 3 - 164, மிஷ்காத் 5762, 5920)
♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: "மக்கள் இருப்பிரிவினராக பிரிகின்றபோது அவற்றில் சிறந்த பிரிவில் இறைவன் என்னை அமைத்தான்"ஹழ்ரத் அனஸ் (ரலியல்லஹு அன்ஹு)
( பைஹகி (தலாயிலுந் நுபுவ்வா 81)
♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது என்று கூறினார்கள். (ஸஹிஹ் முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்) கூறியுள்ளார்கள்: "நிச்சயமாக நான் அல்லாஹுதஆலாவின் பால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன்"
(மிஷ்காத் – 5800, தாரமி – 15, பைஹகி ஸுஃபுல் ஈமான் – 1446)
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக பூமியிலுள்ள பொக்கிஷங்களின் திறப்புகள் என்னிடமே உள்ளது"(ஸஹீஹுல் புகாரி - 1-508, மிஷ்காத் 512)
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: "நான் விரும்பினால் தங்க மலைகள் என்னிடம் விரைந்து வந்துவிடும்"(ஆதாரம் மிஷ்காத் 521)
♣ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: "தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பொக்கிஷங்களையும் கொடுக்கப்பட்டுள்ளேன்."
( இப்னு மாஜா 3952, மிஷ்காத் 512)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்"ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹீஹுல் புகாரி 6575)
♣  நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறியபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டதுஅதில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்.ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹிஹுல் புகாரி - 200)
♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. வேறு சில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹீஹுல் புகாரி 3561)
♣ அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களை நான் பார்த்தேன். அஸருடைய தொழுகையின் நேரம் வந்தது. (ஒழுச் செய்யத்) தண்ணீரை மக்கள் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. ஒலுச் செய்ய ஒரு பாத்திரம் (தண்ணீர்) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்பாத்திரத்தில் தங்கள் கையை வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒழுச் செய்யுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்களுடைய விரல்களுக்கு அடியிலிருந்து தண்ணீர் வெளிவருவதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் ஒழுச் செய்தனர். ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹூ அன்ஹூ)
(ஆதாரம்  ஸஹிஹுல் புகாரி )
♣ பெருமானார் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களின் திருமுகம் வாளை போன்று (மின்னக்கூடியதாக) இருந்ததா என்று பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை, சந்திரனை போன்று இருந்தது என்று கூறினார்கள்.ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹிஹுல் புகாரி - 3552)
♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் சூரியனை போன்றும் சந்திரனை போன்றும் இருந்தார்கள்.ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு )
(ஸஹிஹ் முஸ்லிம் - 2344, திர்மிதி - 3636, மிஷ்காத் – 515)
♣ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு சந்தோசம் மேலிட்டால், அவர்களின் அழகு திருமுகம் சந்திரனின் ஒரு துண்டு போல் இலங்கிகொண்டிருக்கும்.  இதனை நாங்கள் (மிக தெளிவாகவே அறிந்துக்கொள்வோம்.ஹழ்ரத் கஹ்பு இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹீஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் – 518)
♣ நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக் கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
(திர்மிதி 3648 , முஸ்னத் அஹ்மத் 2 - 350 , மிஷ்காத் 5795)
♣ நிச்சயமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரைக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள். ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232)
♣உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னு மவ்ஹப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம், என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன். ஹழ்ரத் இஸ்ராயீல் இப்னு யூனுஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹிஹுல் புகாரி 5896)
♣ என்னைக் கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவரைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மொழிந்தார்கள். ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
( திர்மிதி, மிஷ்காத், கிதாபுல் மனாகிப் )
♣ பேச்சு சரியாக வராத ஒரு பெண்மணி அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தாள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பெண்மணி, 'எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு அளிக்கக்கூடாதா?' என்று கேட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். அதற்கு அப்பெண்மணி, 'தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டார். உடனே அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், தங்கள் வாயிலுள்ள உணவை வெளியாக்கி, அப்பெண்ணிடம் கொடுத்தார்கள். அப்பெண் அதனை தன் வாயில் போட்டுக் கொண்டார். அதனை சாப்பிட்டு விட்டார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் போய்விட்டது! (ஆதாரம் தப்ரானி )
♣ கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள்.
(ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்)
♣ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்: இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம் என கூறினார்கள் (ஸஹிஹ் முஸ்லிம் பாகம்2, பக்கம் 190)
♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை; (எதையும்) உங்களுக்குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவனேயாவேன். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வினால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன்.(ஸஹீஹுல் புகாரி - 3117)
♣ கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:நிச்சயமாக நானே உங்கள் யாவரிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவனாகவும், மிக வாய்மைக்குரியவனாகவும், மிக நல்லவனாகவும் இருக்கிறேன்
(ஆதாரம் .மிஷ்காத் 226)
♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாவும் இருந்தார்கள். ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
( ஸஹிஹுல் புகாரி 6033)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறக் கேட்டேன். ஹழ்ரத் முஹம்மத் பின் முன் கதிர் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹிஹுல் புகாரி 6034)
♣ நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன்(மனம் வேதனைப்படும்படி) என்னை …ச்சீ என்றோ (இதை ஏன் செய்தாய் என்றோ. நீ (இப்படிச்) செய்திருக்கக்கூடாதா? என்றோ அவர்கள் சொன்னதில்லை.ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) (ஸஹிஹுல் புகாரி 6038)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள்.ஹழ்ரத் அபூசயீத் அல்குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு)(ஸஹிஹுல் புகாரி 6119)
♣ இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதியிருக்கிறேன்)" என்றேன். ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்இதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன். ஹழ்ரத் ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு) (ஸஹிஹுல் ஹ் முஸ்லிம் 1357)
♣ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார். ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹீஹுல் புகாரி - 15)
♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ''சந்திரனை இரண்டு துண்டுகளாக (பிளந்து) காட்டினார்கள்''  எந்த அளவிற்கென்றால், மக்கா வாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே 'ஹிரா' மலையைக் கண்டார்கள். ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
( ஸஹிஹுல் புகாரி- 3869. 3870. 3871 4865. 3868)
♣நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசி சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது. ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
(ஸஹிஹுல் புகாரி 3639)
♣   நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவிலிருக்கும் ஒரு கல்லை அறிவேன். நான் தூதராக அனுப்பபடுவதற்கு முன்னாலயே அது எனக்கு ஸலாம் சொல்ல கூடியதாயிருந்தது. இப்பொழுதும் அந்தக் கல்லை நான் அறிவேன்.
( ஸஹிஹ் முஸ்லிம் 2277)
♣ நான் ஸலாமா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் கெண்டைக்காலில் அடிபட்ட ஒரு காயத்தின் அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர், 'கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது. 'ஸலாமா காயம் பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை.' என்று கூறினார்கள். ஹழ்ரத் யஜீது பின் அப்திர் ரஹ்மான் (ரலியல்லாஹு அன்ஹூ)
(ஆதாரம் அபூதாவூத்)
♣ ஹழ்ரத் கதாதா பின் நுஃமான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது. அவர் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தார். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது!
(ஆதாரம் தப்ரானி, பைஹகி)
♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கண்டவுடன் மலைகளும், மரங்களும் ஸலாம் கூறின.( திர்மிதி - 3626, தாரமி - 1-12, ஹாக்கிம் - 2-620, மிஷ்காத் - 5919)
♣ அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சுமை சுமக்கும் ஒரு தோழருக்கு துஆச் செய்தார்கள். 'தோழரே! நீர் சுமப்பீராக! நிச்சயமாக நீர் கப்பலாக உள்ளீர்' என அவரிடம் கூறினார்கள். அந்தத் தோழர் கூறுகிறார், நான் அதற்கு பிறகு ஒரு ஒட்டகை அல்லது இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஒட்டகைகளின் சுமைகளை சுமந்தாலும் அது எனக்குக் கனமாக இருக்கவில்லை!
(ஆதாரம் முஸ்னத் அஹ்மத்)
♣இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஸஹ்பா என்னுமிடத்தில் லுஹ்ரைத் தொழுதுவிட்டு அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்ர் தொழுது கொண்டிருந்தார்கள். (தொழுகையை நிறைவேற்றிய பின்) அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மடி மீது தலை வைத்து உறங்கினார்கள். அவர்களை அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுப்பிவிடவில்லை. சூரியனும் மறைந்து விட்டது. பிறகு (எழுந்து ) கூறினார்கள்:இறைவனே! நிச்சயமாக உன் அடியார் அலி இறைத்தூதருக்கு பணியாற்றுவதில் அகப்பட்டுக் கொண்டார். ஆகவே, அவருக்காக சூரியனை திருப்பியனுப்பு! (மறைந்த) சூரியன் திரும்பி வந்து மலைகளுக்கு மேலாக உயர்ந்தது. அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து உளூ செய்து விட்டு அஸரைத் தொழுதார்கள். பின்பு சூரியன் மறைந்து விட்டது. ஸஹ்பா எனுமிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.ஹழ்ரத் அஸ்மா பின்த் உமைஸ் (ரழியல்லாஹு அன்ஹா) (தப்ரானீ (கபீர்) 19861,  இப்னு அஸாகிர் 17369,  ஷவ்கானீ (ஃபவாயித் மஜ்மூஆ) 1088)