Tuesday, August 17, 2021

ஆப்கானிஸ்தான்-பேரரசுகளின் கல்லறை

"பேரரசுகளின் கல்லறை"
ஆப்கானிஸ்தான் "பேரரசுகளின் கல்லறை" என்று அழைக்கப்படுகிறது.  கிமு 11 ஆம் நூற்றாண்டு முதல், பல்வேறு சாம்ராஜ்யங்களும் படைகளும் ஆப்கானிஸ்தானின் மீது கட்டுப்பாட்டைப் பெற முயன்றதாக வரலாறு கூறுகிறது.  

வளமான, தாதுசுரங்க நிலப்பரப்புள்ள நாடாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அதிக புவி-மூலோபாய பவர்பிளே விளையாட்டில் ஒரு கவர்ச்சியான இடமாகத் தொடர்கிறது.

வரலாற்றில், பாரசீகத்தில் (இன்றைய ஈரான்) பேரரசுகள் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்த முயன்றன.  அலெக்ஸாண்டர், அல்லது சிகந்தர் என உலகின் இந்தப் பகுதியில் அறியப்படுகிறார், போருக்குப் பிறகு போரில் வென்று நவீன இந்தியாவின் எல்லைகளுக்கு அருகில் வந்தார்.  அவர் ஆப்கானிஸ்தானைப் பார்த்தார்.

ஆனால் அவரது அதிர்ஷ்டம் தீர்ந்துவிட்டது. தீரா குளிரில் சிக்கி மாண்டு விடுகிறார்.

மகத் (தெற்கு பீகார்) பகுதியைச் சேர்ந்த வலிமையான மவுரியர்களும் இப்பகுதியை பார்த்து தோல்வியடைந்தனர்.  

இது வரலாற்றின் ஒரு பகுதியாகும், இது இன்று வரை மீண்டும் நிகழ்கிறது.

முகலாயர்கள், பிரிட்டிஷ், சோவியத் மற்றும் இப்போது அமெரிக்கர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த முயன்றனர் ஆனால் தோல்வியடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் திரும்பி வருவது வரலாற்றாசிரியர்கள் நாட்டிற்கு வழங்கிய அடைமொழியின் மற்றொரு சரிபார்ப்பாகும்: பேரரசுகளின் கல்லறை.  

தலிபான்களும், தனது முதல் முயற்சியில் ஆப்கானிஸ்தான் மீது ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. பேரரசு, வல்லரசுகளின் வீழ்ச்சி ஒரு புரியாபுதிர்.

இந்த தாலிபான்கள் யார், உலகமே ஏன் இவர்களைக் கண்டு பயப்படுகிறார்கள்?  அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும்?  அவர்கள் மீண்டும் உலகளாவிய தலைப்புச் செய்திகளை உருவாக்கும்போது, ​​இதோ அவர்களின் கதை ...

தலிபான் என்றால் மாணவர்கள்.  உலகெங்கிலும் அச்சத்தை பரப்பும் இந்த வார்த்தை முதலில் பாஷ்டோ மொழியின் அர்த்தம்.  

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானின் 55 சதவீத மக்கள்தொகையின் முதல் மொழி பாஷ்டோ.  

ஆப்கானிஸ்தானின் எல்லையான பாகிஸ்தான் மற்றும் ஈரானின் சில பகுதிகளிலும் பாஷ்டோ மொழி பேசப்படுகிறது.

இன்று, "தாலிபான்" என்ற வார்த்தை ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு இஸ்லாமிய அமைப்பைக் குறிக்கிறது.

இன்று, இந்த வார்த்தை உலகிற்கு பயத்தைத் தூண்டுகிறது. பல்வேறு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர். 

மறைமுக யுத்தம் உச்சத்தில் இருந்த காலம். உலகநாடுகள் அமெரிக்கா சார்பு, சோவியத் ஒன்றியம் சார்பு என பிரிந்து நின்ற தருணம்.
 
1978-இல் சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இடது சாரிகள் கம்யூனிஸ்ட் அரசை  அமைத்தனர். ஒரே ஆண்டில் அந்த அரசு கவிழ்க்கப்பட்டது. 

இதன்பின்னர் ஆப்கனுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே ஆக்கிரமித்தன. 

அப்போது சோவியத் யூனியனுக்கு எதிராக போர் புரிய அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கப்பட்டவர்கள், முஜாஜிதீன்கள். சோவியத் யூனியனுக்கு தலைவலியைக் கொடுக்க இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது, அமெரிக்கா. அங்கிருந்துதான் ஜிஹாத், புனித்போர் என்கிற இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைக்கும் சொற்கள் பிறப்பெடுத்தன. 

சோவியத் படைகளுக்கு எதிராக இஸ்லாமிய போராளிகள் கொரில்லா தாக்குதலை தொடுத்தனர். 

இதனை அமெரிக்கா ஊக்குவித்தது. ஆம், அமெரிக்காவிற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை தாங்கள் வெட்டும் பயங்கரவாத புதைகுழியில் தாங்களே சிக்கிக் கொள்ளப் போகின்றோம் என்று.

10 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்த சோவியத் யூனியன், பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை பறிகொடுத்தது. பொதுமக்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். 

பேரிழப்பை சந்தித்த சோவியத், வேறு வழியின்றி 1988ஆம் ஆண்டு ஆப்கானிலிருந்து வெளியேறியது. அப்போது அமெரிக்கா உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய போராளிக் குழுக்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் வெடித்தது. இந்த யுத்தங்களில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர்.

இந்த தருணத்தில்....?
பாகிஸ்தான் ஆதரவுடன் பிறந்ததுதான் உலகை நடுங்க வைக்கும் தலிபான்கள் அமைப்பு. 
அதனை நிறுவியவர் முல்லா முகமது ஓமர் மற்றும் அவரது மாணவர்கள். உருவாக்கப்பட்ட ஆண்டு, 1994. 

ஆப்கானின் தென்பகுதியில் நிலை ) காந்தகார் கொண்டிருந்த தலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்து, அரவணைத்தது. பாகிஸ்தான் மதரஸாக்களில் பயின்றவர்கள் தலிபான் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தலிபான்கள் படிப்படியாக தங்களது எல்கையை விரிவுபடுத்தி 1988இல் தலைநகர் காபூலை கைப்பற்றினர். 

அப்போது ஆப்கான் அதிபராக இருந்தவர் புர்ஹானுதீன் ரப்பானி. 

ஆப்கன் முஜாஹிதீன் என்ற அமெரிக்க ஆதரவு அமைப்பின் தலைவர்தான் இந்த ரப்பானி. 

அவரது ஆட்சியை வீழ்த்திவிட்டு அதிகாரத்தை வசப்படுத்தினர், இந்த தலிபான்கள். இதன் விளைவாக இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும், கார் ஓட்டக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது, குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் தண்டனை என தாலிபான்கள் வைத்ததே சட்டமாகிப் போனது. 

அதில் உச்சம் 2001ஆம் ஆண்டு புத்தர் சிலைகளை தலிபான்கள் வெடிவைத்து தகர்த்த நிகழ்வு. இதன் காரணமாக தாலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்தன. 

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமிரேட்ஸ், செளதி அரேபியா ஆகியவை மட்டுமே அங்கீகரித்தன. 

பாகிஸ்தான் ஆதரவுடன் உருவான தாலிபான்கள், பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாகவே மாறிப் போயினர். 

ஆப்கானில் அபின் போதைப் பொருளை தடை செய்ததும் தாலிபான்கள்தான். தாலிபான்கள் ஆட்சிக் காலத்தில் அல்கொய்தா என்கிற ஒசாமா பின்லேடனின் சர்வதேச பயங்கரவாத இயக்கம் வேர்பிடித்தது. 

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி உலகத்தையே அதிர வைத்த அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியது அல்கொய்தா இயக்கம்தான் என்று சொல்லப்படுகிறது. 

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோத செய்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 19 தற்கொலைப்படையினர் நடத்திய இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்குப் பின்னர் உலகம் பயங்கரவாதம் குறித்து பேசியது. 

உலக ஒழுங்கு என்பது பெரிய அளவுக்கு மாறிப் போனது. தனிநாடு, சுதந்திரம், விடுதலை யுத்தம் என தேசிய இனங்கள் போராடினாலும் அதுவும் பயங்கரவாத வகைப்பட்டியலில் சிக்கியது. 

அப்படி சிக்கி சிதைந்துபோன இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.

இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இறங்கின. 

தாலிபான்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு ஜனநாயக முறையிலான அரசு ஆப்கானிஸ்தானில் உருவாக்கியது அமெரிக்கா.

இங்கு தான் அமெரிக்காவின் கல்லறை பயணம் தொடங்கியது.

இருபது ஆண்டுகாலப் போருக்குப் பிறகு, அமெரிக்காவும் 2001ல் அவர்களால் பதவியிறக்கப்பட்ட தாலிபனும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தன. 

வெளிநாட்டுப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் துவங்கின.

அமெரிக்காவின் மிக நீளமான போரான இதை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் ஜோ பைடன், இந்தப் போரைக் கண்காணிக்கும் நான்காவது அதிபராவார். 

11 செப்டம்பர் 2021ல் எல்லா படைகளும் முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஒரு இலக்கை அவர் நிர்ணயித்துள்ளார்.

2004ல் ஆஃப்கானிஸ்தானில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததிருந்த போதிலும், சோர்ந்து போகாமல் தாலிபன்களின்  தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன. 

2009ல் அதிபர் பராக் ஒபாமா நடத்திய "ட்ரூப் சர்ஜ்" தாலிபான்களைக் கொஞ்சம் கட்டுக்குள் வைத்தது என்றாலும் அது நெடுங்காலம் நீடிக்கவில்லை.

2001க்குப் பிறகான மிக மோசமான காலகட்டமாக 2014 கருதப்படுகிறது. அந்த ஆண்டு நேட்டோவின் சர்வதேச ராணுவங்கள் தங்கள் படையெடுப்பை நிறுத்திக்கொண்டன. 

பாதுகாப்பின் பொறுப்பு ஆஃப்கானிஸ்தான் ராணுவத்திடம் விடப்பட்டது. 

இது தாலிபனுக்கு சாதகமாக அமையவே, அவர்கள் மேலும் இடங்களைக் கைப்பற்றினர்கள்.

20 ஆண்டுகள் ஆஃப்கானிஸ்தானில் நடந்த போர் - எப்போது என்ன நடந்தது? அறிவது அவசியம்.

9/11 தொடங்கி, பெரிய அளவில் நடந்த சண்டையாக மாறி, இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் வரை நடந்தது தான் என்ன?

வல்லரசு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மண்ணில் கல்லரையான நிகழ்வுகள் என்னவென்று பார்ப்போம்.

• 11 செப்டம்பர் 2001

அமெரிக்காவின் இறுதி நாட்கள் இந்த தினத்திலிருந்து தான் ஆரம்பமானது.

நான்கு பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டன. இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது மோதின, கட்டிடம் இடிந்து விழுந்தது. ஒரு விமானம் வாஷிடங்க்டனில் உள்ள பெண்டகனை இடித்தது, ஒன்று பெனிசில்வேனியாவில் உள்ள வயல்வெளியில் விபத்துக்குள்ளானது. கிட்டத்தட்ட 3000 பேர் இறந்தனர்.

இச்சம்பவத்தை ஆஃப்கானிஸ்தானிலில் இருந்த ஒஸாமா பின் லேடனின் தலைமையில் இயங்கும் அல் கொய்தா என்ற அமைப்பே காரணம் என  அமெரிக்கா அறிவித்தது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் இன்றைய நாள் வரை அமெரிக்காவின் உளவு துறை தேடிக்கொண்டு தான் இருக்கிறது.

• 7 அக்டோபர் 2001

முதல் வான்வழித் தாக்குதல்
அமெரிக்காவின் தலைமையில் உள்ள சில படைகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் மற்றும் அல்கொய்தா தளங்களின்மீது குண்டு வீசுகின்றன. காபூல், காந்தஹார், ஜலாலாபாத் நகரங்கள் தாகக்பப்டுகின்றன.
ஒரு தசாப்தம் நீடித்த சோவியத் யூனியன் ஆக்கரமிப்புக்குப் பிறகு ஒரு உள்நாட்டுப் போர் வந்தது. அதன்பிறகு தாலிபான்கள் பதவிக்கு வந்திருந்தனர். பின்லேடனை ஒப்படைக்க அவர்கள் மறுத்தனர். அவர்களது வான்படைகளும் சிறு போர் விமானங்களின் கூட்டம் ஒன்று அழிக்கப்பட்டது

• 13 நவம்பர் 2001

காபூலின் வீழ்ச்சி

கூட்டணி அமைப்புகளின் ஆதரவோடு இயங்கிய தாலிபன் எதிர்ப்புக் குழுவான வடக்குக் கூட்டணி காபூலுக்குள் நுழைகிறது. 

தாலிபான்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

2001 நவம்பர் 13ம் தேதிக்குள் எல்லா தாலிபன்களும் வெளியேறிவிட்டனர் அல்லது அடக்கப்பட்டனர். மற்ற நகரங்களும் வீழ்ந்தன.

• 26 ஜனவரி 2004

பெரிய சட்டமன்றம் (லோயா ஜிர்கா) ஒன்றில் ஒப்பந்தங்கள் நடந்தபிறகு, புதிய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்தானது. அக்டோபர் 2004ல் இது அதிபர் தேர்தலுக்கும் வழிவகுத்தது.

• 7 டிசம்பர் 2004

ஹமீத் கர்ஸாய் அதிபராகிறார்

ஹமீத் கர்ஸாய்
போபால்ஸி துராணி இனக்குழுவின் தலைவரான ஹமீத் கர்ஸாய், புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபராக இவர் இரு ஐந்தாண்டு காலங்கள் நீடித்தார்.

• 15 மே 2006

ஹெல்மாண்டுக்கு பிரிட்டிஷ் துருப்புகள் அனுப்பபட்டன
ஆஃப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள தாலிபான் ஆக்கிரமிப்புப் பகுதியான ஹெல்மாண்ட் மாகாணத்தில் பிரிட்டிஷ் படைகள் வந்திறங்கின.

மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு உதவுவதற்காகவே அவர்கள் வந்திருந்தார்கள் என்றாலும், போர் அவர்களை இழுத்துக்கொண்டது. 

450 பிரிட்டிஷ் வீரர்கள் இறந்தனர்.

• 17 பிப்ரவரி 2009

ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் படைவீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். 

அதிகபட்சம் 1,40,000 வீரர்கள் வரை இருந்தனர். இராக்கில் அமெரிக்கா கையாண்ட யுத்தி இங்கும் பின்பற்றப்பட்டது. பொதுமக்களைப் பாதுகாப்பதோடு ஊடுருவும் படைகளைக் கொல்வதாகவும் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

• 2 மே 2011

ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டார். 

ஒசாமா பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாதில் ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் அமெரிக்க நேவி சீல்களால் கொல்லப்பட்டார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு கடலில் மர்மமான முறையில் அடக்கம் செய்யப்பட்டது. 

சி.ஐ.ஏ நடத்திய 10 வருடத் தேடல் முடிவுக்கு வந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானை நம்ப முடியாது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. 

ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வசித்த தகவல் இதை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் இருந்தது.

• 23 ஏப்ரல் 2013

முல்லா உமரின் இறப்பு

தாலிபானின் நிறுவனர் முல்லா உமர் இறந்தார். அவரது இறப்பு இரண்டு ஆண்டுகள் ரகசியமாகவே வைக்கப்பட்டது. பின்னாளில் இது அவருடைய மகனால் அறிவிக்கப்பட்டது.

ஆஃப்கானிய உளவுத்துறை தரும் தகவல்களின்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த கராச்சி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தனது நாட்டில் வசிக்கவில்லை என்று பாகிஸ்தான் மறுக்கிறது.

• 28 டிசம்பர் 2014

நாட்டோவின் விலகல்
காபூலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாட்டோ தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்கிறது. 

அமெரிக்கா ஆயிரக்கணக்கான படைகளை விலக்கிக்கொள்கிறது. 

மீதி இருக்கும் பெரும்பான்மையினர் ஆஃப்கானிய ராணுவ வீரர்களுக்கு உதவவும் பயிற்சி அளிக்கவுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.

அமெரிக்கா தாலிபான்களை வேரறுத்ததாக கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.

• 2015

தாலிபான் மீண்டெழுகிறது
தற்கொலைப் படை, கார் குண்டுவெடிப்பு என தொடர் தாக்குதல்களைத் தாலிபான் நிகழ்த்துகிறது. 

காபூலின் நாடாளுமன்றக் கட்டிடமும் குண்டுஸ் நகரமும் தாக்கப்படுகின்றன. 

இஸ்லாமிய  அமைப்புகள் மீண்டும் ஆஃப்கானிஸ்தானில் செயல்படத் தொடங்குகின்றன.

• 25 ஜனவரி 2019

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிப்பு
ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கானி, தான் 2014ல் பதவி ஏற்றபின்பு 45,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கிறார். 

ஆனால் முன்பு கணிக்கப்பட்டதை விட இந்த எண்ணிக்கை கூடுதலானதாக இருந்தது.

• 29 பிப்ரவரி 2020

இந்த திடீர் எழுச்சி முஸ்லீம் ஷரியத்திற்கு எதிர்மறையாக செயல் பட்ட அவர்களுக்கு அச்சத்தையும், ஆச்சரியத்தையும் தந்தது. 

இதன் விளைவு:

கத்தார், தோஹாவில் அமெரிக்காவும் தாலிபானும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடுகின்றன. 

தாலிபான்கள் தங்கள் ஒப்பந்தத்தை சரியாக செயல்படுத்தினால், 14 மாதங்களுக்குள் எல்லா படைகளையும் விலக்கிக்கொள்வதாக அமெரிக்காவும் நேட்டோவும் உடன்படுகின்றன.

• 11 செப்டம்பர் 2021

இறுதி விலகலுக்கான நாள்
9/11 தாக்குதல் முடிந்து சரியாக 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்கப் படைகள் 11 செப்டம்பர் 2021ல் ஆஃப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தத் தேதிக்கு முன்பே படைகள் முழுமையாக விலகிவிடுவதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றன. இந்நிலையில் உலகமெங்கும் அச்சம் கவ்வி கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

¶ சில காரணங்கள்:

ஷரியத் சட்டம் மீண்டும் வழுப்பெறலாம்.

காஷ்மீர் தீர்வு எட்டப்படலாம்

பாலஸ்தீனம் மீட்கப்படலாம்

இஸ்லாமிய நல்லாட்சி மலர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம். ஆமீன்

No comments:

Post a Comment